சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம், வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் திருமலைமுருகன், மாவட்ட செயலாளர் துரைசிங், மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநில துணை தலைவர் பரமேஸ்வரி, மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், மாவட்ட துணை தலைவர்கள் சண்முகம், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.