போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம்

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி வருகிற 11-ந் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் தஞ்சையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.;

Update:2023-10-09 01:42 IST

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி வருகிற 11-ந் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் தஞ்சையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

கடையடைப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர்வரத்தின்றி ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியது. சம்பா, தாளடி சாகுபடியும் கேள்விக்குறியானது. இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெறுகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த பேராட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார இயக்கம் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

ஆதரவுகேட்டு பிரசாரம்

இதில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், வணிகர் சங்கங்கள், நகை கடை உரிமையாளர் சங்கம், துணிக்கடை உரிமையாளர்கள் சங்கம், திலகர் திடல் மாலை நேர காய்கறி மார்க்கெட் நிர்வாகிகளை சந்தித்து நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்