விவசாயிகளுக்கு மூவிதழ் அடங்கல் சான்று வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு மூவிதழ் அடங்கல் சான்று வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2022-10-09 18:45 GMT

தொண்டி, விவசாயிகளுக்கு மூவிதழ் அடங்கல் சான்று வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முத்துராமு கலெக்டருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் திருவாடானை ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளை தொடங்கினர். தற்போது விதைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தூரல் மழை மற்றும் நேற்று பெய்த கனமழை காரணமாக பயிர்கள் முளைத்து வெளியில் வந்துள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விதைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பயிர் காப்பீடு செய்ய காலம் கடத்தாமல் மூவிதழ் அடங்கல் சான்று வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கூட்டுறவு கடன் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகளும் பயிர் காப்பீடு பதிவு செய்யவும் கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்