பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு

30-ந்தேதியுடன் ஓய்வு பெறவுள்ள பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-20 19:39 GMT

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த பாண்டியனை பதவி உயர்வாக சென்னை சிறப்பு பிரிவு குற்றப்பிரிவின் சி.ஐ.டி.-1-க்கு போலீஸ் சூப்பிரண்டாக நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற பாண்டியன் வருகிற 30-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியனின் சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம் ஆகும். மேலும் அவர் கவிஞர் வைரமுத்துவின் சகோதரர் உறவு முறை ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்