கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்-மாநில சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

10 ஆண்டு பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2022-07-11 23:20 IST

தமிழக அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் மாநில தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் மாரி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சுருளி பாண்டி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில சங்க ஆலோசகர் பெருமாள், மாநில பொது செயலாளர் யாக்கோபு, மாநிலச் செயலாளர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் தடியப்பன், முருகானந்தம் ஜெயபால் காளீஸ்வரி ஜெயக்குமாரி, சாந்தி, பாண்டி, சிவகங்கை வட்ட நிர்வாகிகள் செல்வகுமரன், அழகர் சந்தானலட்சுமி, கார்த்திகேய ராஜா, உமாமகேஸ்வரன், ராஜா, வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:- கிராம உதவியாளர்களை கல்வி தகுதி பார்க்காமல் பணிக்காலத்தை கணக்கில் கொண்டு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். 2003, 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கீதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்