வேளாண்மை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு- அரசாணை வெளியீடு

வேளாண்மை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

Update: 2022-10-29 22:50 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாட்டில் வேளாண் திட்டப் பயன்களை விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவும், திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி செயலாக்க வேண்டியுள்ளதாலும், தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதாலும், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது வேளாண்மைத்துறையில் உள்ள 23 துணை வேளாண்மை இயக்குனர்கள் வேளாண்மை இணை இயக்குனர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குனர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையினை தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்