லாட்ஜில் விபசாரம்; 2 பேர் கைது

விழுப்புரத்தில் லாட்ஜில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 6 அழகிகள் மீட்கப்பட்டனர்.

Update: 2023-01-29 19:33 GMT

விழுப்புரம் நகரில் சிலர் லாட்ஜிகளை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பரண்டு பார்த்திபன், விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் நேற்று லாட்ஜிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அழகிகள் மீட்பு

அப்போது விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது தெரிந்தது. அந்த லாட்ஜில் இருந்த 6 அழகிகளை போலீசார் மீட்டனர். மேலும் விபசாரம் நடத்தியது தொடர்பாக பள்ளியந்தூரை சேர்ந்த சுதாகர் (வயது 45), அகரம் சித்தாமூரை சேர்ந்த கோவிந்தன் (48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாட்ஜிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்