பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-05-14 20:26 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. பிரமுகர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும், திருவேங்கடம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், துணைச் செயலாளர் பால் நேரு உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது ஹரிஹரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் மேரி புஷ்பலதா, விவசாய சங்க செயலாளர் மதிராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்