வள்ளியூர் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்
வள்ளியூர் யூனியன் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடஙகி வைக்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டிடம், ரூ.27 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, ரூ.13 லட்சம் மதிப்பில் கன்னங்குளம் மற்றும் கூட்டப்புளி கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழாவுக்கு லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவர் கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். புதிய திட்டப்பணிகளை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்.