கந்திலி ஒன்றியத்தில் அனைத்து வார்டுகளிலும் ரூ.4 லட்சத்தில் திட்டப்பணிகள்
கந்திலி ஒன்றியத்தில் அனைத்து வார்டுகளிலும் ரூ.4 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியத்தில் அனைத்து வார்டுகளிலும் ரூ.4 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கந்திலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரிக்கை வைத்து பேசினர். கந்திலி ஊராட்சி பகுதியில் உள்ள 85 பள்ளிகளுக்கு வர்ணம் பூச ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது, ரூ.90 லட்சம் செலவில் பள்ளிகளை புதுப்பிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கொரட்டி, உடையாமுத்தூர், சு.பள்ளிப்பட்டு பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். மேலும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.4 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நன்றி கூறினார்.