திட்ட பணிகளை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
திட்ட பணிகளை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.
கலசப்பாக்கம்
திட்ட பணிகளை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரியகிளாம்பாடி ஊராட்சியில் ஏற்கனவே பழுதடைந்து உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சிறுக்கிளாம்பாடி பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காரிய நிகழ்ச்சி மேடையும் கட்டப்பட்டு வருகிறது
இப்பணிகளை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதிராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, என்ஜினியர் அருணா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.