ஊரக வளர்ச்சி துறை சார்பில் திட்ட பணிகள்: பாலாராஜபுரம், மாயனூர் ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

ஊரக வளர்ச்சி துறை சார்பில் பாலாராஜபுரம், மாயனூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-20 18:41 GMT

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலாராஜபுரம் மற்றும் மாயனூர் ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டார். அப்போது சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.70 லட்சம் மதிப்பிலான புதிய 2 வகுப்பறை கட்டிட பணிகள் நடைபெற்று வருவதையும், அதே பள்ளியில் சத்துணவு திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாலாராஜபுரம், நத்தமேடு பகுதியில் பாரத பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தனி நபருக்கு வீடு கட்டும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதையும், மாயனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.7.51 லட்சம் மதிப்பிலான பள்ளி வகுப்பறைகள் கட்டிடங்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.46 லட்சம் மதிப்பிலான 3 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு அப்பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்