கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும்
தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும்
மணல்மேடு:
மணல்மேடு ராதாபுரம் வைத்தியநாதசுவாமி கோவிலில் அகில பாரத இந்து மகா சபாவின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில் பாதுகாப்பு பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கோவில் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.