அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்குகளுக்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்குகளுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-06-07 18:41 GMT

சென்னை,

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போலீசில் அறப்போர் இயக்கம் புகார் செய்தது. அதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக குற்றம் சாட்டி இருந்தது.

இதையடுத்து அறப்போர் இயக்கத்திடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு 3 வழக்குகளை ஐகோர்ட்டில், சந்திரசேகர் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கிற்கு பதில் அளிக்க அறப்போர் இயக்கத்துக்கு தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "அறப்போர் இயக்கம் சார்பில் தங்களது பதிவு சமூக வலைதளங்களில் வெளிவந்த ஓராண்டு காலத்துக்குள் வழக்கு தொடராமல், 3 ஆண்டுகள் கழித்து இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3 வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தனர். விசாரணையை வருகிற ஜூலை 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்