செல்போன் கோபுரத்தில் கூடுதல் செயல்பாடுகள் ஏற்படுத்த தடை

செல்போன் கோபுரத்தில் கூடுதல் செயல்பாடுகள் ஏற்படுத்த தடை

Update: 2022-06-30 13:26 GMT

ஊட்டி

ஊட்டி அருகே விவேகானந்தர் நகர் உள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில், செல்போன் கோபுரம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த செல்போன் கோபுரத்தில் கூடுதல் செயல்பாடுகளை ஏற்படுத்த பொருட்கள் கொண்டு வரப்பட்டு, பணிகள் தொடங்கியது. உடனே பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அது தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுமக்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்போவதாக உரிமையாளருக்கு, நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீண்டும் அங்கு பொருட்களை கொண்டு வந்து பணிகளை தொடங்கினர். இதுகுறித்து பொதுமக்கள், ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில் நகரமைப்பு கட்டிட ஆய்வாளர் மீனாட்சி, நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பணிக்கு தடை விதித்ததோடு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்