மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சீர்காழியில் நடந்தது
சீர்காழி:
சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, சீர்காழி நகர செயலாளர் இனிய தமிழன், மாவட்ட பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி நிர்வாகி ஞானவள்ளி வரவேற்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் பாதரகுடி காமராஜ் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்களை வழங்கி பேசினார். இதில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜயரெங்கன், கிறிஸ்து பேரவை மாநில துணை செயலாளர்கள் எருக்கூர் தாஸ், பால்ராஜ்ரெத்தினம், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கம், கொள்ளிடம் ஒன்றிய இளம் சிறுத்தை பாசறை அமைப்பாளர் ரஞ்சித், கட்சி நிர்வாகிகள் ஆசைதம்பி, வைத்தியநாதன், மோசஸ் வளவன், ஆதி, சகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உழவர் சந்தை, பழைய பஸ் நிலையம், கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.