பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

செய்துங்கநல்லூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-22 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் 36-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5,036 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும், மகளிருக்கு மஞ்சள்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள்பைகளை வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் தாலுகா நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் ஆகியோர் பேசினர். வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, மணிமாலா, விவசாய சங்க தலைவர் குமார், சமூகசேவகர் சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மரக்கன்றுகள் கண்காட்சியை உதவி கலெக்டர் திறந்து வைத்தார். பகுதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தனிஅலுவலர் ராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்