பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-10-11 16:28 GMT

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயப்பிரதா வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 4 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். எம்.பில், பி.எச்டி. படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், மதுரை மண்டல இணை செயலாளர் லதா, துணைத்தலைவர் மணிகண்டன், துணை செயலாளர் செல்வம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Tags:    

மேலும் செய்திகள்