ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 305 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், ஆசிரிய கருத்தாளர்கள், அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, உதவி திட்ட அலுவலர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கரூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சத்யாவதி, அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.