திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலுக்கு பூத்தட்டுக்களுடன் பெண்கள் ஊர்வலம்
திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலுக்கு பூத்தட்டுக்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சுவாமி கோவில் விழா ஆண்டுதோறும் தை பொங்கல் நாளில் நடைபெறுவது வழக்கம். புதுப்பட்டி, கோபாலபுரம், அச்சம்பட்டி, வடக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்ய மலர், தேங்காய், பழம் தட்டுக்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்து கோவில் முன்பு ஒன்று கூடினர். இதனைத் தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
இதைதொடர்ந்து 100 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகளை முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு சமைத்து அன்னதானம் வழங்கினர்.