அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் ஊர்வலம்

அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் ஊர்வலம்;

Update: 2023-05-01 17:50 GMT

திருப்பத்தூர், மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு நாகேந்திரன் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் பூபதி, முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட தலைவர் ராஜி கலந்துகொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் குறித்தும், அரசிடம் இருந்து தேவைப்படும் உதவிகள் குறித்தும் பேசினார்கள்.

ஊர்வலம் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, பஸ் நிலையம் வழியாக செனறு தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு கட்டுமான தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பலர், பேசினார்கள். ஊர்வலத்தில் திருப்பத்தூர் மாவட்ட கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்