அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.
தேர்தல் கால வாக்குறுதிகள் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாலை ஊர்வலம் நடந்தது. திருச்சியில் நடந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.