பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி சுயம்பு மண்டு மாரியம்மன் கோவிலில் கங்கனம் கட்டுதல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Update: 2023-02-26 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி சுயம்பு மண்டு மாரியம்மன் கோவிலில் 14-ம் ஆண்டு கங்கனம் கட்டுதல் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மதியம் கரகம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர் மண்டு மாரியம்மன் ஊர்வலம் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாடுகள் ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்