முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.;

Update: 2022-10-13 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு முளைப்பாரி விதை போட்டு வளர்த்து வந்தனர். தினமும் கோவில் முன்பு பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். இந்த நிகழ்ச்சி 9 நாட்களும் தொடர்ந்து நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா நடந்தது. கோவிலில் இருந்து கிளம்பிய முளைப்பாரி ஊர்வலம் மேலரதவீதி, வடக்கு ரதவீதி, சிவன் கோவில், வீரபத்திரர்கோவில், கோரக்கநாதர் கோவில் வழியாக மாரியம்மன் கோவில் சென்றது. பின்பு அதே வழியாக வந்து தினசரி மார்க்கெட், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, நரிக்குடி ரோடு வழியாக திருப்புவனம் பழையூர் காமாட்சியம்மன் கோவில் வரை சென்று பின்பு ஊருணியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்