தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-02 16:58 GMT

தர்மபுரியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தேசிய ஊட்டச்சத்து மாதம்

ஒவ்வொரு ஆண்டும் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்திருவிழா-2022 ஒரு மாதத்திற்கு கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் சாந்தி தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் சாந்தி கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதையடுத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம் வழியாக அரசு மருத்துவமனையை சென்றடைந்தது. ஊர்வலத்தின் போது ஊட்டச்சத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜான்சிராணி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்