காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்செல்லகுமார் எம்.பி. பங்கேற்பு

காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-09-09 19:30 GMT

கிருஷ்ணகிரி:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, மாநில இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனார். இந்த ஊர்வலத்தை செல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, பெங்களூரு சாலை, தர்மராஜா கோவில் சாலை வழியாக காந்திசிலை அருகில் இந்த ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் நகர தலைவர் முபாரக், மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் நகரத் தலைவர்கள், வின்செண்ட், இருதயம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்து, ஆறுமுக சுப்பிரமணி, ரமேஷ் அர்னால்டு, ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்