பாளையம்புதூரில் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடு்த்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

Update: 2023-08-30 19:30 GMT

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடு்த்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், அம்மன் அலங்கார சேவை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காளியம்மன் ஊர்வலம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) அம்மன் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்