கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.;
இட்டமொழி:
நாங்குநேரி மேற்கு ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற கிருஷ்ணாபுரம் அணிக்கு நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு பரிசு வழங்கினார். 2-வது இடம் பெற்ற சுப்பிரமணியபுரம் அணிக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், இலங்குளம் பஞ்சாயத்து தலைவருமான வி.இஸ்ரவேல் பிரபாகரன் பரிசு வழங்கினார். 3-வது இடம் பெற்ற வல்லத்தி நம்பிகுளம் அணிக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சின்னத்துரை பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வர்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.