வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு

மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்

Update: 2022-09-20 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளிடையே 3 பிரிவுகளாக மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கோலியனூர் கூட்டுசாலையில் தொடங்கி பொய்யப்பாக்கம், ஆயுதப்படை மைதானம், விளையாட்டுத்திடல் வரை சென்று நிறைவு பெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு சைக்கிள் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.250 மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்