பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

Update: 2022-10-23 18:44 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சன்மார்க்க வள்ளலார் சபை உறுப்பினர் 10 பேருக்கு வள்ளலார் உருவம் பொறித்த வெள்ளி முத்திரையும், வள்ளலார் புகழ்பாடும் வகையில் நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நிைனவு பரிசுகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, சன்மார்க்க சாது உமாபதி, சன்மார்க்க சங்க தலைவர் அருள்நாகலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அருட்பெருஞ்ஜோதி அகல்விளக்கு ஏற்றுதல், ஊர்வலம், வடலூர் இசை நிகழ்ச்சி, மாணவிகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்