ஐவர் ஆக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

பாளையங்கோட்டையில் நடந்த ஐவர் ஆக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;

Update: 2023-06-25 20:03 GMT

உலக ஒலிம்பிக் தின விழிப்புணர்வை முன்னிட்டு, ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு விடுதி ஆக்கி வீரர்களுக்கு ஐவர் ஆக்கி போட்டி பாளையங்கோட்டையில் நடத்தப்பட்டது. மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியை பாளையங்கோட்டை விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்தினராஜன் தொடங்கி வைத்தார்.

இதில் ஆண்கள் பிரிவில் கவுதம் ஆக்கி அணிக்கு முதல் பரிசும், மணிமாறன் ஆக்கி அணிக்கு 2-வது பரிசும், கிருஷ்ணன் ஆக்கி அணிக்கு 3-வது பரிசும் கிடைத்தது. பெண்களுக்கான பிரிவில் மகேஸ்வரி ஆக்கி அணிக்கு முதலிடமும், முப்புடாதி ஆக்கி அணிக்கு 2-வது இடமும் துரைச்சி ஆக்கி அணிக்கு 3-வது இடமும் கிடைத்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமை தாங்கினார். செயலாளர் பீர்அலி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்