பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகள் 5 பேர், கல்லூரி மாணவ- மாணவிகள் 3 பேர் மற்றும் கருணாநிதி பிறந்தநாள் அன்று நடந்த பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழும், திருக்குறள் முற்றோதல் செய்த 4 மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி உடன் இருந்தார்.