சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பாவூர்சத்திரத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான முதலாவது சிலம்ப போட்டி நடைபெற்றது, இதில் மாவட்ட அளவில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தலைவர் சத்தியபீமன் வரவேற்றார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தென்காசி மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்க செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்.