பாய்மர படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-03-13 20:09 GMT

திசையன்விளை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பாய்மர படகு போட்டி பெருமணலில் இருந்து உவரி வரை நடந்தது. போட்டியை மீனவர் பேரவை மாநில செயலாளர் ஆல்டிரின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 8 பாய்மர படகுகள் கலந்து கொண்டன. உவரியை சேர்ந்த அர்சிட் செல்வம் முதல் இடமும், திலிப் 2-வது இடமும் பிடித்தனர்.

பின்னர் உவரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரைமண்ட் தலைமை தாங்கினார். உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அந்தோணி முன்னிலை வகித்தார். கேப்டன் அம்புரோஸ் வரவேற்று பேசினார். முதல் இடம் பிடித்த அர்சிட் செல்வத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சார்பில் 2 பவுன் தங்க சங்கிலியும், முதல்-அமைச்சர் கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த திலிப்புக்கு 1 பவுன் தங்க சங்கிலியும், முதல்-அமைச்சர் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்