ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Update: 2022-11-24 18:45 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்ட தேர்தல் முகமை மற்றும் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு ஓவிய போட்டியை நடத்தியது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் சண்முகம் முன்னிலை வகித்தார். கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதுரத்துல்லா கலந்து கொண்டு பேசினார். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். முன்னதாக கூடலூர் தாசில்தார் சித்தராஜ், தேர்தல் முகமை துணை தாசில்தார் சாந்தி பேசினர். இதில் வருவாய் துறை ஊழியர்கள், மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி தேர்தல் முகமை அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் வீராசாமி வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அர்ச்சுணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்