சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக, நாகை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க செஸ் போட்டி நாகையில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 67 மாணவர்களும், 39 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் மாணவர் இன்பன், மாணவி நித்யாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த மாணவர்கள் 2 பேரும் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக பங்கேற்க உள்ளனர். சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். இதில் நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜா, உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், நாகை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சுந்தர்ராஜ், தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.