சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

காரைக்குடியில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாங்குடி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

Update: 2022-06-21 18:31 GMT

காரைக்குடி,

சென்னையில் நடைபெறும் 44-வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டிகள் காரைக்குடி கலைவாணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சதுரங்க கழக தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாங்குடி பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார். தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன் வெற்றியாளர்களை பாராட்டி பேசினார். இதில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் பிரகாஷ், இணைச்செயலாளர் ராமு, சந்திரகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலர் பிரகாஷ்மணிமாறன் நன்றி கூறினார். 217 பேர் பங்கேற்ற இப்போட்டியில் 50 பேர் பரிசு பெற்றனர். காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி லெக்சனா பெண்கள் பிரிவிலும் சிவகங்கை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவன் ரோஹித் ஆண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்று சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியினை நேரில் பார்ப்பதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்