வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வாய்மேடு:
அகரம் மெட்ரிக்பள்ளி, இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 436 பேர் கலந்து கொண்டனர். போட்டியை முன்னாள் எம்.பி. பி.வி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாநில சதுரங்க இணைச் செயலாளர் பாலகுணசேகரன், சதுரங்க சங்க மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், தலைவர் விஜயன், மாவட்ட இணை செயலாளர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் சார்லஸ், வைத்தியநாதன், வீரசேகரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 230 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அகரம் பள்ளியைச் சேர்ந்த மாணவன் மகிழ்நன், ஆறு சுற்றுகள் கொண்ட போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இந்த மாணவனை ஆசிரியர்கள் பாராட்டினர்.