வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.;

Update: 2023-10-16 20:46 GMT

தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் போலீஸ் துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைப்பது என்பது குறித்த கட்டுரை போட்டியும், போலீசார் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.

கட்டுரைபோட்டியில் மகாராஜபுரம் ரெங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சஜித் முதல் பரிசும், விருதுநகர் டி.பி.என்.எம். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ஹேம தர்ஷினி 2-வது பரிசும், திருத்தங்கல் குளோரி மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி மனிஷா 3-வது பரிசும் வென்றனர்.


ஓவியப்போட்டியில் திருத்தங்கல் கலைமகள் உயர்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி சுஜிதா முதல் பரிசும், பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் சந்திரநாதா கணேஷ் 2-வது பரிசும் வென்றனர்.

கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி நேகா 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்