போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-26 18:36 GMT

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, ஊராட்சி மன்ற உறுப்பினர் பானுமதி, மேலாண்மை குழு உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 10, 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கும், குடியரசு தின விழாவில் நடந்த பேச்சுப்போட்டி, கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்