போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி கலைவாணி கல்வி மையத்தில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-01-14 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரியில் ஜோகோ அறக்கட்டளையின் மூலம் செயல்படும் கலைவாணி கல்வி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு ஜோகோ நிறுவன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அக்சயா சிவராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் கலந்துகொண்டு, கபடி, சிலம்பம், பரதநாட்டியம், கும்மிப்பாட்டு, முளைப்பாரி பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக கல்விமைய வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை தங்கராஜ், ஜோகோ அறக்கட்டளையின் மூலம் செயல்படும் சுரண்டை, தேனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்தும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் வந்து கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்