மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு

அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.;

Update: 2023-06-13 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடத்தினர். விழாவிற்கு ஆசிரியர்கள் லூக்காஸ், ராமசாமி, கார்த்திக், ஆறுமுகச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.ஏ.சூசை, தலைமை ஆசிரியர் மரிய அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை செந்தில்குமாரி வரவேற்றார். தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமு ராமர், விஜயகுமார், சந்தனமகாராஜன், இசக்கிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியைகள் முத்துச்செல்வி, மேகலா ஆகியோர் நன்றி கூறினார்கள். விழா ஏற்பாடுகளை சமூக மற்றும் மேம்பட்ட கல்வி வளர்ச்சிக்கான சங்க பொருளாளர் இளையராஜா, ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி, ராஜ், செந்தில்குமார், ஆனந்த், ராமர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்