மாணவ-மாணவிகளுக்கு பரிசு
அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.;
கடையம்:
கடையம் அருகே பொட்டல் புதூரில் தேசிய கல்வி அறக்கட்டளை மஸ்ஜீதுர் ரஹ்மான் நிர்வாகம் சார்பில் கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் முகமது மைதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தமிழ் வளர்ச்சி மேம்பாட்டு பொறுப்பாளரும், மஸ்கட் தமிழ்ச் சங்கம் முன்னாள் துணைத்தலைவருமான கவிஞர் பஷீர், நெல்லை அரசு அருங்காட்சியகம் மாவட்ட காப்பாட்சியர் சத்தியவள்ளி, பொட்டல்புதூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஷாபி ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் அபூபக்கர் சித்திக், பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஸ்ஜிதுர் ரஹ்மான் ஷாபி ஜமாத் பிலால் அப்துல் ரசாக் கிராத் ஓதினார்.
மஸ்ஜிதுர் ரஹ்மான் ஷாபி ஜமாத் தலைவர் மறைந்த முகமது முகைதீனுக்கு தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது கலந்துகொண்டு 2022 -23 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, அதிக மதிப்பெண்கள் பெற்ற பொட்டல்புதூர் பஞ்சாயத்தின் 15 கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி பள்ளிகளின் செயலாளர் சுந்தரம், எல்.ஐ.சி.சிராஜ், பொட்டல்புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அசன் பக்கீர், மஸ்ஜிதுர் ரஹ்மான் ஷாபி ஜமாத் பொருளாளர் ஜபருல்லா, முகமது கண் ஷாபி, கோஜா நஜ்முத்தின், முகமது மைதீன், முகமது கனி, பீர் முகமது, பக்கீர் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.