பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவித்தலைமையாசிரியர் லெனின் தலைமை தாங்கினார். இதில் அண்ணாவை பற்றி ஆசிரியர்கள் பேசினர். இதையடுத்து மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.