மணல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
பட்டிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற மணல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு அரசு சார்பில் மணல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வித்தியவானி, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை ஆகியோர் தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குலசேகரன் முன்னிலை வகித்தார். விழாவில் தொலைக்காட்சியால் மாணவர்களுக்கு நன்மையா? தீமையா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மணல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி அளவில் முதலிடத்தையும், ஒன்றிய அளவில் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் ஜனனி, லக்ஷிதா, நந்தினி, தக்ஷினா, லட்சித் ரோஷன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.