உடுமலை விவசாயிக்கு பரிசு

Update: 2023-01-26 15:14 GMT

உடுமலை விவசாயிக்கு பரிசு

திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டியதன் அடிப்படையில் உடுமலை வட்டாரம் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.இந்த போட்டியின் முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை பொங்கலூர் வட்டாரம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆகியோர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கினர்.

மேலும் செய்திகள்