போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

வள்ளலார் பற்றிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

Update: 2022-12-11 17:30 GMT


வள்ளலார் பற்றிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

முப்பெரும்விழா

வள்ளலாரின் 200-வது முப்பெரும்விழா சிவகங்கையில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் போட்டிகளில் பங்கேற்ற 45 பேருக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய நூல்களை வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழா சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

வள்ளலார் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக அவதரித்து சீறிய சிந்தனை யுடனும், தனது லட்சியத்துடனும் வாழ்ந்து காட்டியவர். தர்மசாலா தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டுகளுக்கான நிகழ்வுகள் இன்றைய தினம் தொடங்கப்பட்டது.

முன்மாதிரி

இதனை முப்பெரும் விழாவாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளதன்படி இந்த விழா நடக்கிறது. முதல்-அமைச்சர் தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு அவர் பேசினார்.

இதையொட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் சன்மார்க்க கிளையினர் பேரணி சிவகங்கை பஸ் நிலையத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள விழா நடைபெறும் இடத்தை வந்தடைந்தது.

சான்றிதழ்

விழாவையொட்டி வள்ளலாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதை போட்டி ஆகியவை மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மொத்தம் 45 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய நூல்கள் வழங்கப ்பட்டன.

வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 பேருக்கு வௌ்ளி டாலர்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், காஞ்சிரங்கால் ஊரட்சி தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டர்.

Tags:    

மேலும் செய்திகள்