தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது சுயவிபர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார்கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, முன்அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9499055904, 9750975354 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.