தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-06-14 18:45 GMT


தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்