தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-03-15 20:00 GMT

தமிழ்நாடு மாநில ஊரக-நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேப்பூர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, கலை அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் படித்துள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (இருபாலர்) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணையும், 9444094325 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்